/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிட்னியில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்
/
சிட்னியில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்
சிட்னியில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்
சிட்னியில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 06, 2024 08:02 AM

புதுச்சேரி : காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பிற்கான தேர்தல் குறித்து இந்திய மாநிலங்களின் சபாநாயகர்கள் ஆலோசனைக் கூட்டம் சிட்னி நகரில் நேற்று நடந்தது.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 67வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர் மாநாடு நடந்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, வரும் 7 ம் தேதி நடக்கும் காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பிற்கான தேர்தல் குறித்து இந்திய மாநிலங்களின் சபாநாயகர்கள் ஆலோசனைக் கூட்டம் சிட்னி நகர், ஷாங்க்ரிலால் ஹோட்டலில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டமைப்பின் பொருளாளரும், இந்திய நாட்டின் பிரதிநிதியுமான அனுராக் ஷர்மா எம்.பி., தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, கர்நாடக சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை மற்றும் மேலவை தலைவர்கள் கலந்து கொண்டனர்.