தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடமை தவறாத மூதாட்டி ஓட்டுப் போட தயார்

 கடமை தவறாத மூதாட்டி ஓட்டுப் போட தயார்

 கடமை தவறாத மூதாட்டி ஓட்டுப் போட தயார்


ADDED : ஏப் 08, 2026 06:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் 76 வயது மூதாட்டி அனைத்து தேர்தல்களில் ஓட்டுப்பதிவு செய்த நிலையில் இன்று நடக்கும் தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ய தயாராகி வருகிறார்.

முதலியா்பேட்டை, பட்டம்மாள் வீதி, முதல் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி குப்பு, 76. தமிழகத்தைச் சேர்ந்த இவர் சிறுவயதிலேயே திருமணம் ஆகி புதுச்சேரிக்கு வந்துவிட்டா். இதனால், தனது முதல் ஓட்டை புதுச்சேரியில் தான் பதிவு செய்தார். அப்பொழுது வெங்கடசுப்ப ரெட்டியார், சுப்பையா ஆகியோர் களத்தில் இருந்துள்ளனர்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர்., காமராஜர், ஜெயலலிதா, ராஜிவ் ஆகியோரின் பிரசாரத்தை பார்த்து உள்ளார். முதல் ஓட்டு பதிவு செய்த 20 வயதில் இருந்து ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது, தவறாமல் ஓட்டு போட்டு வந்துள்ளார்.

அதன்படி, இன்று (9ம் தேதி) நடக்கும் ஓட்டுப்பதிவிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக தயாராக உள்ளார். இதேபோல், தற்போதைய இளைஞர்கள் தங்களது ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காமல், தங்களது உரிமையை நிலைநாட்ட தவறாமல் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அவருக்கு அக்காலத்தில் எம்.ஜி.ஆர்., மிகவும் பிடித்த தலைவராம். தற்போது முதல்வர் ரங்கசாமியை பிடிக்கும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us