/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியை மறக்க சிகிச்சை பெற்ற பூ வியாபாரி வலிப்பு ஏற்பட்டு சாவு
/
குடியை மறக்க சிகிச்சை பெற்ற பூ வியாபாரி வலிப்பு ஏற்பட்டு சாவு
குடியை மறக்க சிகிச்சை பெற்ற பூ வியாபாரி வலிப்பு ஏற்பட்டு சாவு
குடியை மறக்க சிகிச்சை பெற்ற பூ வியாபாரி வலிப்பு ஏற்பட்டு சாவு
ADDED : மே 02, 2025 04:47 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியை மறக்க சிகிச்சை பெற்ற பூ வியாபாரி வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் 44; பூ வியாபாரி. இவருக்கு அய்யம்மாள் 40; என்ற மனைவியும், 14, 12 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள மோகனசுந்தரம் அடிக்கடி குடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக வியாபாரத்திற்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் கணவரின் குடிப்பழக்கத்தை மறக்க அய்யம்மாள், கணவருக்கு வில்லியனூரில் சிசிச்சை பெற்றுள்ளார்.
சிகிச்சைக்குப் பின் மோகனசுந்தரம் குடிக்காமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடன் அவரை வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து மறுத்தவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அய்யம்மாள் கொடுத்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.