/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வ மங்கள சாய்பாபா கோவிலுக்கு பாதயாத்திரை
/
சர்வ மங்கள சாய்பாபா கோவிலுக்கு பாதயாத்திரை
ADDED : டிச 23, 2024 06:28 AM

புதுச்சேரி: பெரம்பை சர்வ மங்கள சாய்பாபா கோவிலுக்கு உலக நன்மை வேண்டி புதுச்சேரியில் இருந்து 6ம் ஆண்டு பாதயாத்திரை நேற்று நடந்தது.
புதுச்சேரி அடுத்த பெரம்பை, வழுதாவூர் சாலையில் சர்வ மங்கள சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சர்வ மங்கள சாயி சேவா சமிதி சார்பில் உலக நன்மை வேண்டி மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் இருந்து சாய்பாபா கோவிலுக்கு பாதயாத்திரை நடந்து வருகிறது.
அதன்படி, 6ம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நேற்று காலை 5:00 மணிக்கு காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று, நேரு வீதி, சாரம், மேட்டுப்பாளையம் வழியாக 11 கிலோ மீட்டர் பாதயாத்திரை சென்று, பெரம்பை சர்வ மங்கள சாய்பாபா கோவிலில் நிறைவு செய்தனர்.
அங்கு, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிேஷகம், விசேஷ பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

