/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல் குவாரி 100 அடி பள்ளத்தில் விழுந்து கூலி தொழிலாளி பலி
/
கல் குவாரி 100 அடி பள்ளத்தில் விழுந்து கூலி தொழிலாளி பலி
கல் குவாரி 100 அடி பள்ளத்தில் விழுந்து கூலி தொழிலாளி பலி
கல் குவாரி 100 அடி பள்ளத்தில் விழுந்து கூலி தொழிலாளி பலி
ADDED : ஜன 30, 2024 06:37 AM
வானுார் : விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருவக்கரை பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. எறையூரைச் சேர்ந்தவர் சாவித்திரி; ஊராட்சி தலைவர்.
இவரது கணவரான லோகநாதன், 52, என்பவர், சின்னக்கண்ணன் என்பவர் பெயரில் குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரியில் கடந்த மாதம் பெய்த கனமழையில், தண்ணீர் சூழ்ந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு, எறையூர்திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி மகன் வீரப்பன், 45, குவாரியில் சூழ்ந்திருந்த தண்ணீரைவெளியேற்ற பைப் போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, குவாரியின் மேல் பகுதியில் இருந்து 100 ஆழ குவாரிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வீரப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு வானுார் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கலெக்டர் கவனிப்பாரா?
திருவக்கரை பகுதியில் ஒரு சில கல் குவாரிகள் 'பர்மிட்' முடிந்த பிறகும் செயல்பட்டு வருகின்றன. சில குவாரி உரிமையாளர்கள் புறம்போக்கு இடத்தை சுற்றிவளைத்து தங்கள் இஷ்டத்திற்கு கற்களை தோண்டி எடுத்து கோடிக்கணக்கில் பணம் பார்த்து வருகின்றனர்.இதனை, கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டு கொள்வதில்லை. 'பர்மிட்' முடிந்த இந்த கல் குவாரியில், ஏற்கனவே அரசுஅனுமதித்ததைவிட மெகா பள்ளம் தோண்டப்பட்டு கனிம வளம் சுரண்டப்பட்டு விட்டது.
இந்த குவாரியில் தண்ணீரைவெளியேற்றுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், ஒரு உயிர் நேற்று பறிபோனது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரடியாக, குவாரியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.