தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளலாம் தொழில்துறை வல்லுநர் முரளிசுந்தரம் பேச்சு

 ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளலாம் தொழில்துறை வல்லுநர் முரளிசுந்தரம் பேச்சு

 ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளலாம் தொழில்துறை வல்லுநர் முரளிசுந்தரம் பேச்சு


ADDED : ஏப் 04, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 08:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நீங்கள் நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளலாம் என, தொழில்துறை வல்லுநர் முரளிசுந்தரம் பேசினார்.

புதுச்சேரியில் தினமலர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

ஒரு சில டெக்னாலஜி எல்லாம் நுாற்றாண்டிற்கு ஒருமுறை தான் வரும். இந்த நுாற்றாண்டிற்கு ஜெனரேட்டிவ் ஏ.ஐ., வந்துள்ளது. தற்போது இதன் மூலம் அறிவியல் தொடர்பாக நடப்பது அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. எதாவது ஒரு கான்சப்ட்டை விளக்குமாறு கூறினால் சிறப்பாக இந்த தொழில்நுட்பம் செய்யும். உங்கள் ஐடியாவை, செயல்முறையாக இந்த தொழில்நுட்பத்துடன் சேர்ந்து செய்யலாம். மொழிகளை மாற்றலாம்.

அதற்கு சரி, தவறு என்பது தெரியாது. இந்த தொழில்நுட்பத்தில் நீங்கள் நிறைய தகவல்களை கற்றுக்கொள்ளலாம். நீங்கள் தவறு செய்தால் உங்களை தண்டிக்காது. தேர்விற்கு தயாராவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கல்லுாரிகளில் சாப்ட் ஸ்கில்ஸ் ஆக பயன்படுத்த உள்ளனர்.

மதிப்பெண் வாங்குவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடாது. மதிப்பெண்ணை விட ஒழுக்கம் முக்கியம். உங்கள் திறனை அதிகரிக்க இந்த தொழில்நுட்பம் தேவை. எந்த பிரச்னையாக இருந்தாலும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ., பயன்படுத்தி தீர்வு காணலாம். விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்ற கூடாது. காப்பி செய்ய கூடாது. தகவல்களை மட்டுமே கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us