/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலங்கோலமானது 'ரோலர் ஸ்கேட்டிங்' மைதானம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள்
/
அலங்கோலமானது 'ரோலர் ஸ்கேட்டிங்' மைதானம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள்
அலங்கோலமானது 'ரோலர் ஸ்கேட்டிங்' மைதானம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள்
அலங்கோலமானது 'ரோலர் ஸ்கேட்டிங்' மைதானம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள்
ADDED : அக் 20, 2024 05:07 AM

புதுச்சேரி : ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக கிடப்பது முகம் சுளிக்க வைக்கிறது.
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் பள்ளி கல்வித் துறையின் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இங்கு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் 26-வது மாநில சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய போட்டிக்கான வீரர்கள் தேர்வு கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. இத்தேர்வு முகாமில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவர்களுடன் வரும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மைதானத்தை சுற்றிலும் உள்ள இருக்கையில் அமர்ந்து போட்டியை பார்க்கும்போதே, தாங்கள் கொண்டு வந்த திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, அதன் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மீதமுள்ள உணவுப் பொருட்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால் மைதானம் அலங்கோலமாக காட்சி அளிப்பதால், அவ்வழியே செல்லும் பொது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
நாளை 21ம் தேதி வரை போட்டிகள் நடக்கும் நிலையில், குப்பைகள் மேலும் குவிந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், அவர்களது பெற்றோர், பார்வையாளர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் என அனைவருமே சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.
எனவே, துாய்மை பணிக்கான ஏற்பாடுகளையும் இனி தாமதிக்காமல் போட்டி ஏற்பாட்டாளர்கள் சமூக பொறுப்புடன் கட்டாயம் செய்ய வேண்டும். போட்டி ஏற்பாட்டாளர்கள், மைதானத்தை சுற்றிலும் தேவையான இடங்களில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்து, குப்பைகளை சேகரித்து உழவர்கரை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், போட்டிக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம், குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல், குப்பை தொட்டிகளில் போட அறிவுறுத்த வேண்டும்.