/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நட்பாக பழகி திருடியவருக்கு வலை
/
நட்பாக பழகி திருடியவருக்கு வலை
ADDED : டிச 08, 2025 04:56 AM
புதுச்சேரி: நட்பாக பழகி பணம், கேமராவை திருடிச் சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புனேவைச் சேர்ந்தவர் ரிஷி சப்கல்,26; கடந்த 1ம் தேதி புதுச்சேரிக்கு வந்த இவர், உருளையன்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இவர், அதே விடுதியில், தங்கியிருந்த புனேவை சேர்ந்த சுனில் 26, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சுனில் 'ஜி-பே' வேலை செய்யாததால், தனது நண்பர்கள் 9 பேருக்கு ரூ.30 ஆயிரத்தை அனுப்ப கூறினார். அதன்பேரில், ரிஷி ரூ.30 ஆயிரம் பணத்தை அனுப்பினார்.
அந்த பணத்தை திருப்பி தராத சுனில், கடந்த 4ம் தேதி அறையை காலி செய்து கொண்டு ரிஷி வைத்திருந்த கேமரா, ஹார்டு டிஸ்க் திருடி சென்றுவிட்டார்.
இது குறித்து ரிஷிசப்கல் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

