/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காப்பீடு செய்ய கட்டணம் செலுத்துமாறு ஐயப்ப பக்தர்களிடம் நுாதன மோசடி
/
காப்பீடு செய்ய கட்டணம் செலுத்துமாறு ஐயப்ப பக்தர்களிடம் நுாதன மோசடி
காப்பீடு செய்ய கட்டணம் செலுத்துமாறு ஐயப்ப பக்தர்களிடம் நுாதன மோசடி
காப்பீடு செய்ய கட்டணம் செலுத்துமாறு ஐயப்ப பக்தர்களிடம் நுாதன மோசடி
ADDED : நவ 06, 2024 06:40 AM
புதுச்சேரி : சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களை தொடர்பு கொண்டு கேரள அரசு அறிவித்துள்ள காப்பீடு திட்டத்தை செயல்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி மோசடி நடந்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;
தற்போது சபரிமலை சீசன் துவங்க உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் ரூ. 5 லட்சம் வழங்கும் வகையில் காப்பீடு செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சைபர் கிரைம் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
சபரிமலை செல்ல உள்ள பக்தர்களை வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், காப்பீடு திட்டத்தில் சேர வேண்டுமானால் செயலாக்க கட்டணம், ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என கேட்பதாக புகார் வருகிறது. இது போல் கேரள அரசு எதையும் கேட்கவில்லை. மேலும் வயதானவர்கள், ஓய்வூதியம் பெருவோரிடம் வங்கி அதிகாரிகள் பேசுவதுபோல் பேசி மோசடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதில் புதுச்சேரியைச் ஓய்வூதியம் பெறுவோர் ரூ. 40 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளனர்.வங்கி அதிகாரிகள் எனக்கூறி தகவல்களை கேட்கும் நபர்களிடம், ஒ.டி.பி., வங்கி தகவல்கள், ரகசிய குறியீட்டு எண்களை வழங்க வேண்டாம்.
ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். டிஜிட்டல் கைது, சிம் கார்டு முடக்கி வைத்துள்ளோம் என கூறினால், உடனடியாக 1930 மற்றும் 9489205246/0413-2276144 என்ற எண்ணிற்க்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். புதுச்சேரி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸ் நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.