/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் தற்கொலை
/
மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் தற்கொலை
ADDED : நவ 15, 2024 04:00 AM
அரியாங்குப்பம்: குடி மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் அடுத்து மணவெளியை சேர்ந்தவர் இளையராஜா, 38; இவர், மீது அரியாங்குப்பம் போலீசில் கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இவர், தொடர்ந்து மது குடித்ததால், கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி கோபித்து கொண்டு, வீராம்பட்டினம் உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார்.
இந்நிலையில், அரியாங்குப்பம், தனியார் குடி மறு வாழ்வு மையத்தில், இளையராஜா தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மறு வாழ்வு மையத்தில், நிர்வாகத்திடம் சொல்லாமல், அங்கிருந்து, அவர் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் தனது மகளுக்கு மொபைல் போனில், நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், என பேசி விட்டு, வீட்டில் அறையில் அவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.