தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு

அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு

அசைவ உணவு சாப்பிட்டவர் சாவு


ADDED : ஜன 18, 2024 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மாட்டு பொங்கலன்று அசைவ உணவு சாப்பிட்ட கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், நெடுங்காடு, வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன், 48; கூலி தொழிலாளி. இவரது வீட்டில் மாட்டு பொங்கலையொட்டி, நேற்று முன்தினம், கோழி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தயார் செய்து குலசாமிக்கு படையலிட்டனர்.

இரவு முருகேசன் உட்பட அனைவரும் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு, துாங்க சென்றனர். பின், அவரது உறவினர்கள் பார்த்தபோது முருகேசன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்தார். அவரை, அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us