ADDED : ஏப் 01, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்து இறந்தார்.
கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடிபகுதியை சேர்ந்தவர் கலைமுகில், 27, முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி, முத்தியால்பேட்டை கார்மேல் மடம் பகுதியில் உள்ள மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய போது, கீழே விழந்து அதே இடத்தில் இறந்தார்.
இதுகுறித்து, முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

