/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த வீடு; போலீஸ்காரர் குடும்பத்துடன் தப்பினார்

ADDED : பிப் 10, 2024 06:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி, சேதராப்பட்டு திடீர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்; சி.பி.சி.ஐ.டி பிரிவில் கான்ஸ்டபிள். நேற்று இரவு வீட்டின் முதல் தளத்தில் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் துாங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2:00 மணிக்கு, திடீரென அவரது அறையில் தீப்பிடித்து பொருட்கள் எரிய துவங்கியது. பிரிட்ஜ், பீரோ மற்றும் மரத்தில் ஆன மேசை, நாற்காலிகள் எரிய துவங்கியது.
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு எழுந்தபோது, வீடு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கான்ஸ்டபிள் ராஜேஷ், அவரது மனைவி, குழந்தைகளை துாக்கி கொண்டு வெளியே ஓடி வர முயற்சித்தனர். புகை மூட்டத்தால் வெளியேற முடியவில்லை.
அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதன்பின்னரே ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு தீ அணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
தீயணைப்பு துறை விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.