/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 12 லட்சம் நுாதன மோசடி
/
புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 12 லட்சம் நுாதன மோசடி
ADDED : ஜன 20, 2025 06:15 AM
புதுச்சேரி: புதுச்சேரி, வில்லியனுார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து திருமணம் இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த சந்தோஷ் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் உறுதியளித்து பேசினார்.
அந்த நபர், ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய அப்பெண் பல தவணையாக அவர் தெரிவித்த நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் செலுத்தினார். அதன் மூலம் வந்த வட்டி பணத்தை எடுக்க முயன்றபோது, கோமதி வள்ளியால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த பிரபு என்பவரை தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக, தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதைநம்பி, பிரபு மர்மநபர் தெரிவித்த நிறுவனத்தில் பல்வேறு தவணைகளாக 5 லட்சத்து 87 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி ஏமாந்தார்.
மாகே பகுதியை சேர்ந்த மஹ்மூத் என்பவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டியில் 7 லட்சம் வரை லோன் தருவதாகவும், அதற்காக செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
அதைநம்பி, மஹ்மூத் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், தேங்காய்திட்டு வசந்தா நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வி 66 ஆயிரம் 994 ரூபாய், வாழைக்குளம் சுதீப் 12 ஆயிரத்து 833, அரும்பார்த்தபுரம் மாரியம்மன் கோவில் வீதி சந்தியா 10 ஆயிரம், தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் சக்தி 6 ஆயிரத்து 360, பாகூர் வெங்டேசன் 4 ஆயிரத்து 300, சுல்தான்பேட்டை ஜாகீர் உசேன் 6 ஆயிரத்து 958, அரியாங்குப்பம் மணவெளி கிருஷ்ணன் 3 ஆயிரம் என, 10 பேர் மோசடி கும்பலிடம் 20 லட்சத்து 2 ஆயிரத்து 936 இழந்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.