/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மடுகரை அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்க கோரிக்கை
/
மடுகரை அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்க கோரிக்கை
மடுகரை அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்க கோரிக்கை
மடுகரை அரசு பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 17, 2024 12:12 AM
நெட்டப்பாக்கம் : மடுகரை வெங்கட சுப்பார ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் இல்லாமல் மாணவிகள் அவதியடைகின்றனர்.
மடுகரையில், வெங்கட சுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், மாநில அளவிலான போட்டிக்கு இப்பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவிகள், அருகில் உள்ள நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், இப்பள்ளி பொதுத்தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கிறது. ஆனால் இப்பள்ளிக்கு என்று விளையாட்டு திடல் இல்லை. இதனால் மாலை நேரங்களில் பள்ளி வகுப்பை முடித்து 5 கி.மீ தொலைவில் உள்ள நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பயிற்சிக்கு சென்று வருவதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவிகளை ஊக்குவித்திட, மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைத்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.