/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூட்டிய வீட்டில் அழுகிய ஆண் சடலம்
/
பூட்டிய வீட்டில் அழுகிய ஆண் சடலம்
ADDED : நவ 10, 2024 05:05 AM
புதுச்சேரி : புதுச்சேரி, ரெயின்போ நகர், 10 வது தெருவைச் சேர்ந்தவர் எல்லப்பன், 53. இவருக்கு 2 பெண் பிள்ளைகள், இளைய மகள் இறந்து விட்டார்.
மூத்த மகள் சென்னையில் வேலை செய்து வருகிறார். மனைவி சுதா சென்னையில் மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லப்பன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். வீடு பூட்டி இருந்த நிலையில் துார்நாற்றம் வீசியது.
இதுதொடர்பாக அவரது உறவினர் சோமு பெரியக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது எல்லப்பன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைமக்கு அனுப்பிய போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிந்து, அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.