/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகம் மது குடித்த செக்யூரிட்டி சாவு
/
அதிகம் மது குடித்த செக்யூரிட்டி சாவு
ADDED : நவ 01, 2024 05:30 AM
அரியாங்குப்பம்: அதிகம் மது குடித்த செக்யூரிட்டி இறந்தார்.
தவளக்குப்பம், கடலுார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல், 54; இவருக்கு, ரத்த அழுத்தம் இருந்தது. தவளக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், பணி முடித்து விட்டு அவர் அதிகமாக மது குடித்து, வீட்டில் படுத்திருந்தார். அவரது மனைவி எழுப்பும் போது, அவர் மூச்சு பேச்சு இல்லாமல், இருந்தார்.
அவரை, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், முதலுதவி செய்த பின், அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து, இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.