/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சர் சொன்ன குட்டி கதை
/
மத்திய அமைச்சர் சொன்ன குட்டி கதை
ADDED : நவ 02, 2025 03:53 AM
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் பணிகளை பா.ஜ., வேகப்படுத்தி வருகிறது. இதற்காக இணை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வாலை நியமித்துள்ளது. அண்மையில் புதுச்சேரியில் வந்த அவர் பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் குட்டி கதை ஒன்றையும் புதுச்சேரி பா.ஜ., விற்கும் மேடையில் சொன்னார். அமைச்சர் நமச்சிவாயமும் நீங்களும் இந்த கதையை கேளுங்கள் என்றார்.
'1906-ல் கொல்கத்தா மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடர் நிவேதிதாவை பாரதியார் சந்தித்தார். அப்போது நிவேதிதா, உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்றதற்கு பாரதி, பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும். என் மனைவி இந்த கூட்டத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறாள் என்றார்.
நீங்கள் உங்கள் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறீர்கள். ஆனால், உங்கள் நாட்டிலுள்ள பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறீர்களே.. மேலை நாடுகளில் ஆண்களுக்கு என்ன மரியாதையோ அது பெண்களுக்கும் உண்டு. இனியேனும் உங்கள் நாட்டுப் பெண்களுக்கும் சம உரிமை தாருங்க என்று கேட்டுக் கொண்டார். சகோதரி நிவேதிதாவின் கருத்து பாரதியின் உள்ளத்தைத் தைத்தது. அதுமுதல் பாரதி, தன் மனைவி செல்லம்மாளையும் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்ல ஆரம்பித்தார் என்று மத்திய அமைச்சர் கூற கூட்டத்தில் கைத்தட்டல்கள்...
இப்போது இந்த குட்டி கதை தான் புதுச்சேரி பா.ஜ.,வில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அமைச்சருக்கு முதல்வரிடம் இலாகா கேட்கும் வேளையில், வாரிய தலைவர் பதவியை அமைச்சர் நமச்சிவாயம் தர வேண்டும் என்று குட்டு வைத்து தான் மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.
அமைச்சர் நமச்சிவாயம் வாரிய தலைவர் பதவிகளை கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு தருவாரா என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

