/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதவி கேட்டு காங்., அலுவலகத்தில் சிறப்பு அழைப்பாளர் திடீர் தர்ணா
/
பதவி கேட்டு காங்., அலுவலகத்தில் சிறப்பு அழைப்பாளர் திடீர் தர்ணா
பதவி கேட்டு காங்., அலுவலகத்தில் சிறப்பு அழைப்பாளர் திடீர் தர்ணா
பதவி கேட்டு காங்., அலுவலகத்தில் சிறப்பு அழைப்பாளர் திடீர் தர்ணா
ADDED : மார் 02, 2024 06:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி காங்.,கட்சி அலுவலகம் எதிரே பதவி கேட்டு சிறப்பு அழைப்பாளர் காலவரையற்ற போராட்டத்தினை துவக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்.,கட்சி அலுவலகத்தில் காங்., கட்சியின் சிறப்பு அழைப்பாளர் சத்தியசீலன் தனக்கு பதவி கேட்டு திடீரென தரையில் அமர்ந்து காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
ஏம்பலம் தொகுதி ஆதிதிராவிடர் சமூகத்தினை சேர்ந்த நான் மாணவர் பருவத்தில் இருந்து 29 ஆண்டுகளாக காங்., கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகின்றேன். கட்சிக்காக பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ளேன். ஏம்பலம் தொகுதியில் 1500க்கும்மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்த்து மாநிலத்தில் ஒன்பதாவது இடத்தில் உள்ளேன்.
என்னை மாநில எஸ்.டி.,எஸ்.டி.,பிரிவு தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி,காங்.,கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால், எனக்கு பதவி கொடுக்காமல் கட்சி பணியில் ஈடுபடாதவருக்கு பதவி கொடுத்துள்ளனர்.
காங்., கட்சியில் அனுபவமிக்க என்னை,மாநில எஸ்.சி.,எஸ்.டி.,தலைவராக நியமிக்கும் வரை காலவரையற்ற போராட்டத்தை தொடர உள்ளேன் என்றார்.
இவரின் இந்த போராட்டத்தால் காங்.,கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

