/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டப் பந்தய பயிற்சி பெற்ற மாணவர் மயங்கி விழுந்து சாவு
/
ஓட்டப் பந்தய பயிற்சி பெற்ற மாணவர் மயங்கி விழுந்து சாவு
ஓட்டப் பந்தய பயிற்சி பெற்ற மாணவர் மயங்கி விழுந்து சாவு
ஓட்டப் பந்தய பயிற்சி பெற்ற மாணவர் மயங்கி விழுந்து சாவு
ADDED : மார் 02, 2024 10:43 PM

அரியாங்குப்பம்: ஓட்ட பந்தய பயிற்சி முடித்து சென்ற பள்ளி மாணவர் மயங்கி விழுந்து இறந்தார்.
அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம், மறைமலை அடிகள் சாலையை சேர்ந்தவர் இளமதி. மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது இரண்டாவது மகன் திவாகர், 13; வீராம்பட்டிணம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். இவர், ஓட்டப் பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்பதற்காக சின்ன வீராம்பட்டினம் டி.ஐ.ஜி., விளையாட்டு மைதானத்தில், பயிற்சி எடுத்து வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு பயிற்சி எடுக்க தனது மகனை, இளமதி விளையாட்டு மைதானத்தில் விட்டுட்டு வீட்டுக்கு வந்தார். பயிற்சி முடித்து பின், திவாகர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிந்தார். வீராம்பட்டிணம் சமூதாய நலக்கூடம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
தகவலறிந்து வந்த இளமதி, தனது மகன் திவாகரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவபிராகசம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

