தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகரின் மையப்பகுதியில் திடீரென சாலை உள்வாங்கியதால் பரபரப்பு

 நகரின் மையப்பகுதியில் திடீரென சாலை உள்வாங்கியதால் பரபரப்பு

 நகரின் மையப்பகுதியில் திடீரென சாலை உள்வாங்கியதால் பரபரப்பு


ADDED : ஏப் 17, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நகரின் முக்கியப் பகுதியான நீடராஜப்பர் வீதி மற்றும் பாரதி வீதி சந்திப்பில் நேற்று திடீரென சாலை உள்வாங்கி, பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நேற்று மாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில், இந்தச் சந்திப்பில், எதிர்பாராத விதமாக சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் உருவானது. இதனால் அவ்வழியாகச் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்துத் தகவல் அறிந்தவுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளத்தைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us