/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசலாற்றில் மூழ்கி வாலிபர் சாவு
/
அரசலாற்றில் மூழ்கி வாலிபர் சாவு
ADDED : பிப் 11, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: அரசலாற்று தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
காரைக்கால் சேத்திலால் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 38; கம்பி பிட்டர். திருமணம் ஆகவில்லை. மது பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் குடி போதையில் அரசலாற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கார்த்திக் உடலை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.