ADDED : மார் 02, 2024 10:43 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: அதிகமாக குடித்த வாலிபர் பரிதபமாக இறந்தார்.
மடுகரை அடுத்த சூரமங்கலம், கல்யாணமண்டபம் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 26ம் தேதி வெளியே சென்றவர், நேற்று முன்தினம் மாலை மடுகரை சாராயக்கடை எதிரில் அதிகமாக குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
