/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இணையதளத்தில் பெண் படம் பதிவிட்ட வாலிபருக்கு சிறை
/
இணையதளத்தில் பெண் படம் பதிவிட்ட வாலிபருக்கு சிறை
ADDED : மார் 03, 2024 05:14 AM
புதுச்சேரி: புதுச்சேரி இளம்பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் ஆபாசமாக என பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணின் புகைப்படம், இணைய தளத்தில், ஆபாசமாக பதிவிடப்பட்டிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அதில், காரைக்குடியைச் சேர்ந்த பிரபாகரன், 31, என்ற வாலிபர், அப்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்டது தெரிய வந்தது.
அதையடுத்து, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், போலீசார் மணிமொழி, அருண்குமார், அரவிந்தன் தலைமையிலான போலீசார் காரைக்குடிக்கு சென்று, பிரபாகரனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில், 'பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவிகள் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்.
இவ்வாறு பதிவிடப்படும் உங்கள் புகைப்படத்தை திருடி இணைய வழி குற்றவாளிகள் தவறாக பதிவிடுவர். எனவே, பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றார்.

