/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
/
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
ADDED : நவ 06, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மூலகுளம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் பிச்சவீரன்பேட் பாரிஸ் நகரைச் சேர்ந்த சிராக் 19, என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.