புதுச்சேரியில் மூன்று நாட்கள் விவசாய பொருட்களின் கண்காட்சி
புதுச்சேரியில் மூன்று நாட்கள் விவசாய பொருட்களின் கண்காட்சி
ADDED : மார் 12, 2024 11:55 PM
புதுச்சேரி : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சார்பில், விவசாய பொருட்களின் கண்காட்சி மூன்று நாட்கள் நடக்கிறது. வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக செய்திகுறிப்பு:
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி(நபார்டு) ஓ.என்.டி.சி., மற்றும் ஸ்பேக் இணைந்து, தரங் கொண்டாடும் சேகரிப்பு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் விவசாயப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை மூன்று நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சி, வள்ளலார் சாலை, வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நாளை மறுநாள் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.
இதில், விவசாயிகளை நேரடியாக சந்தைகளுடன் இணைப்பதை நோக்கமாகவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் (எப்.பி.ஓ) உயர்தர தயாரிப்புகளை நிருபித்து அவற்றை நேரடியாக நுகர்வோருக்கு மற்றும் இணையவழியில், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓப்பன் நெட்வோர், உதவியுடன் இணைப்பதே நோக்கமாகும்.
கண்காட்சியில், தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கண்காட்சியில் வைக்கின்றனர்.
அதில், தினை, பாரம்பரிய அரிசி, வகைகள், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், தேன், சமையல், எண்ணெய், நீரா பானம், பலாப்பழம், ஐஸ்கிரீம், ராகி பிரவுனி போன்ற உணவுகள் பொருட்கள் இடப்பெறுகின்றன.
கண்காட்சியை பார்க்க வரும் பொதுக்களுக்கு அனுமதி இலவசம். இதில், மிக்சர், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், குலுக்கள் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
