வங்கியாளர்கள் குழுமம் சார்பில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது
வங்கியாளர்கள் குழுமம் சார்பில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது
ADDED : அக் 25, 2026 02:29 PM
புதுச்சேரி: மாநில வங்கியாளர்கள் குழுமம் சார்பில், மத்திய அரசு திட்டங்கள் குறித்து, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்திய அரசு நிதி சேவைகள் துறை சார்பில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் வகையில், அக்டோபர் 21 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நிதி உள்ளடக்கம் முழுமை அடைவதற்கான பிரசாரம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில், நெல்லித்தோப்பு கீர்த்தி மஹாலில், நாளை (26ம் தேதி) காலை 10:30 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், பிரதமர் ஜனதன் யோஜனா, ஜீவன் ஜ்யோதி பீமா யோஜனா, பாதுகாப்பு பீமா யோஜனா மற்றும் அட்டல் பென்ஷன் யோஜனா போன்ற முக்கிய நிதி நலத் திட்டங்களில் பதிவு மற்றும் இதர சேவைகள் வழங்கப்பட உள்ளது.
கணக்குகளுக்கான வாரிசு நியமனம், உரிமை கோரா வைப்புத் தொகைகள், டிஜிட்டல் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு, மற்றும் வங்கி புகார் தீர்வு முறைகள் குறித்த தகவல்கள் விளக்கம் அளிக்கப்படுகிறது என வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.
