தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுற்றுலா பயணிகளை கவரும் பொம்மை மியூசியம்

சுற்றுலா பயணிகளை கவரும் பொம்மை மியூசியம்

சுற்றுலா பயணிகளை கவரும் பொம்மை மியூசியம்


ADDED : ஜன 23, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி புதுச்சேரி ஒயிட் டவுன் சுய்ப்ரேன் வீதியில் டூப்ளக்ஸ் ஓட்டல் பின்புறம் ஒண்டர்ஸ் ஆப் ஒயிட் டவுன் என்ற பெயரில் பொம்மை மியூசியம் அமைந்துள்ளது. இந்த பொம்மை மியூசியம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் பிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த டெடி மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

அடுத்து பிஷ் மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர்,விளையாட்டு வீரர் தோனி உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிக உயரமான மனிதர் மற்றும் குள்ளமான மனிதர்களின் சிலிகான் சிலைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்துக்குச் சென்றால், விதவிதமான சிலைகளுடன் அழகான செல்பி எடுத்துக்கொண்டு திரும்பலாம்.

இந்த தலைவர்களுடன் படம் எடுத்துக் கொள் ளுவது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு நுழைவு கட்டணம் உண்டு. பெரியவர்களுக்கு 295 ரூபாய். குழந்தைகளுக்கு 195 ரூபாய். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அருங்காட்சியகம் திறந்து இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us