/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
வீடு புகுந்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : டிச 12, 2024 06:11 AM
காரைக்கால்: காரைக்காலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால், கோட்டுச்சேரி, பூவம் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்; வெல்டர். இவரது மனைவி செல்வி. ஆயில் மில்லிலில் வேலை செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி இரவு செல்வி வீட்டை பூட்டிவிட்டு தனது தங்கை வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்தபோது, வாசல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஆயிரம் பணம், 2 கிராம் மோதிரம், 15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு 35 ஆயிரம் ரூபாய்.
இதுக்குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.