தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பசுமை பரப்பை அதிகரிக்க 'மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்

 புதுச்சேரி பசுமை பரப்பை அதிகரிக்க 'மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்

 புதுச்சேரி பசுமை பரப்பை அதிகரிக்க 'மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம்


ADDED : ஜன 14, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரியில் பசுமை பரப்பை அதிகரிக்க, மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், 'ஒரு மாணவனுக்கு ஒரு மரக்கன்று' திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், 490 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.

தேசிய வன கொள்கையின்படி, மாநிலத்தின் நிலப்பரப்பில், 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். புதுச்சேரியில், தற்போது, 11 சதவீதமான, 53 சதுர கி.மீ., மட்டுமே பசுமை பரப்பு உள்ளது.

இதனால் பசுமை பரப்பை அதிகரிக்க, மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், 'கிரீன் புதுச்சேரி மிஷன்' திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய முயற்சியாக, 'ஒரு மாணவனுக்கு ஒரு மரம்' என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாசு கட்டுப்பாட்டு குழுமம், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு, 'ஜியோ டேக்' முறையில் பராமரிக்கும்.

இத்திட்டத்தின் கீழ், ஏம்பலம் தொகுதி, பிள்ளையார்குப்பம் கிராமத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.

அரசு பள்ளி மாணவர்கள், பிள்ளையார்குப்பம், ஈச்சங்காடு உள்ளிட்ட கிராமங்களில், பாதுகாப்பு கூண்டுடன் கூடிய மகிழம், மரமல்லி, சரக்கொன்றை, வசந்தராணி, நாக செண்பகம், கொடுக்காப்புளி உள்ளிட்ட 300 மரங்களை நடவு செய்தனர்.

தற்போது நடப்பட்டுள்ள ஒவ்வொரு மரத்திற்கும், மாணவர் பெயருடன் சேர்த்து, ஜி.பி.எஸ்., மூலமாக தனிப்பட்ட அடையாளம் உருவாக்கி, அதன் மூலமாக, அதன் இருப்பிடம், வளர்ச்சி, ஆரோக்கியம் போன்ற தகவல்கள், ஜியோ டேக் முறையில் துல்லியமாக கண்காணித்து, வளர்ச்சிக்கு ஏற்ப உரம் அளிப்பது, நீர் பாய்ச்சுவது போன்ற பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

பசுமை பரப்பை, 2026க்குள் 15 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us