/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்லே பால் பொருட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
/
பாண்லே பால் பொருட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
பாண்லே பால் பொருட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
பாண்லே பால் பொருட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : மார் 07, 2024 04:00 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே பாண்லே பால் பொருட்களை ஏற்றிச் சென்ற மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் இருந்து பால் பொருட்களை ஏற்றிக்கொண்டு முள்ளோடை நோக்கி மகேந்திரா மேக்சிமோ மினி லோடு கேரியர் வேன் (பி.ஒய் 01 பி.ஒய் 9576) சென்று கொண்டிருந்தது. வேனை செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சாரதி 19; என்பவர் ஓட்டி வந்தார்.
புதுச்சேரி - கடலுார் சாலை, வாய்க்கால் ஓடை சந்திப்பு அருகே சென்ற போது, பின்புறத்தில் வலது பக்க டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
கூண்டு போட்ட வேன் என்பதால், பால் பொருட்கள் வெளியில் விழவில்லை.இருப்பினும், கண்ணாடி பாட்டலில் இருந்த பால் பொருட்கள் உடைந்து சாலையில் கொட்டியது.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வேனை அப்புறப்படுத்தினர். விபத்தில் டிரைவர் சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

