/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

ADDED : செப் 25, 2024 05:11 AM
புதுச்சேரி : வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணி நேரத்தில் இல்லாததால், நோயாளிகள் அவதியுறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக டெங்கு, டைபாய்டு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர்.
அப்போது, பணியில் இருந்த ஒரு ஆண், 2 பெண் டாக்டர்கள் அங்கு இல்லை. டாக்டர்கள் ஓய்வு அறைக்கு சென்று விட்டனர்.
மதியம் 12:30 மணி வரை டாக்டர்கள் பணிக்கு திரும்பாததால், மருத்துவமனை வந்த நோயாளி ஒருவர், சக நோயாளிகள் வெகு நேரம் காத்திருப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வெகு நேரம் காத்திருந்த நோயாளிகள், காய்ச்சலுக்கு பார்மஸி ஊழியரிடம் ஒரு வேளைக்கு மட்டும் மாத்திரை வாங்கி கொண்டு புறப்பட்டு சென்றனர்.