ADDED : ஏப் 15, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அதிக அளவில் மது குடித்த வாலிபர் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
கொம்பாக்கம் பிரியங்கா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் கணபதி,33; திருமணமாகாத இவர், உப்பளம் நேதாஜி நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முதலியார்பேட்டை உள்ள பாரில் அதிக அளவில் மது குடித்த இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை, மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
