/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதார் குறை தீர்க்கும் முகாம் கலெக்டர் ஆலோசனை
/
ஆதார் குறை தீர்க்கும் முகாம் கலெக்டர் ஆலோசனை
ADDED : செப் 25, 2024 04:58 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கலெக்டர் தலைமையில், ஆதார் குறை தீர்க்கும் முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாவட்ட ஆதார் கண்காணிப்பு குழுவின் மூன்றாவது கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி மாவட்டத்தில், ஆதார் சேர்க்கைக்கான நிலவரம் குறித்தும், ஆதார் இணைக்கப்பட்ட பிறந்த பதிவு வழங்குதல், பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் சிறப்பு ஆதார் குறை தீர்க்கும் முகாம் நடத்துவது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், சப்-கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கோட்டாரு, திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் ஷீலா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா, உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சவுந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரி ஜோஸ்பின் சித்ரா, துணை கலெக்டர் வினயராஜ், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் சதீஷ்குமார், வட்டாட்சியர்கள், கல்வித்துறை மற்றும் ஆதார் மண்டல அலுவலக அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.