ADDED : ஆக 31, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, பள்ளி கல்வித்துறையின் சமக்ர சிக்ஷா சார்பில் மாநில அளவிலான ‘மின்னணு உள்ளடக்கம்’ தலைப்பில் ஆடியோ, வீடியோ உருவாக்கும் போட்டி நடந்தது.
இப்போட்டியில், ஜீவானந்தபுரம், அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ராஜேஷ், பங்கேற்று ஆடியோ பிரிவில் சிறப்பு பரிசு பெற்றார்.
இதையடுத்து, கல்வித்துறையின் பரிசு பெற்ற ஆசிரியர் ராஜேஷ்யை, பள்ளியின் பொறுப்பாசிரியர் ராஜ்குமார், ஆசிரியர்கள் கன்னியம்மா, தமிழ்மலர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
