ADDED : ஆக 21, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் 3ம் ஆண்டு சண்முகர் ஆவணி மாத விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, மாலை 5:00 மணிக்கு சண்முகர் அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு சிவருத்ர விஸ்வரூபம் சிவப்பு சாத்தி தீபாராதனை, தொடர்ந்து சுவாமி உள்புறப்பாடு நடந்தது. வரும் 24ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
