/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ.5.99 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
6 பேரிடம் ரூ.5.99 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
6 பேரிடம் ரூ.5.99 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
6 பேரிடம் ரூ.5.99 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : ஏப் 10, 2025 04:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 6 பேரிடம் 5.99 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
சண்முகாபுரத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர், பேஸ் புக் மூலம், வெளிநாட்டில் வேலை உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்தார்.அதில் இருந்த வாட்ஸ் ஆப் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், வீசா பதிவு செய்ய முன்பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி, 3.82 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.
தவளக்குப்பத்தை சேர்ந்ததையல்நாயகி என்பவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம், பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய அவர், 1.83 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
லாஸ்பேட்டையை சேர்ந்த நன்னன் என்பவரை தொடர்பு கொண்ட நபர்,குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறினார். அதற்காக செயலாக்க கட்டணம் கட்ட வேண்டும் என கூறியதை அடுத்து, அவர், 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
உழவர்கரையை சேர்ந்தவர் சுப்பிரதா, 9 ஆயிரம், கரிக்கலாம்பாக்கம் சந்திரகுமார் 2 ஆயிரம், வில்லியனுார் நரேந்திர அகர்வால் 2 ஆயிரத்தை அனுப்பி மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.