/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமறைவான ஆசாமி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
/
தலைமறைவான ஆசாமி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ADDED : டிச 29, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவான ஆசாமி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி கனகசெட்டிக்குளம் நாகப்பன். இவர் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நாகப்பன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இந்த வழக்கு விசாரணையில், நாகப்பன் ஆஜராக வலியுறுத்தி புதுச்சேரி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.