/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமறைவாக உள்ள நபர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
/
தலைமறைவாக உள்ள நபர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
ADDED : அக் 16, 2024 04:35 AM
புதுச்சேரி : கிரிமினல் வழக்கில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவுநபர், உடனடியாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம், கீழக்கரை, நடுத்தெருவை சேர்ந்தவர் சுலைமான் செரீப். இவரது மகன் சுலைமான் சாதிக்.
இவர் மீது பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் தொடரப்பட்ட கிரிமினல் வழக்கு சம்மந்தமாக கோர்ட்டில் ஆஜராகாமல், வசிப்பிடத்தை மறைத்து தலை மறைவாக உள்ளார்.
குற்றவாளியாக பிரகடனப்படுத்தும் முன், புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர்,கடந்த செப்.12,ம் தேதி காலை 10:00 மணிக்கு, நேரிலோ அல்லது வக்கீல் மூலமாவோ சுலைமான் சாதிக் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு நோட்டீஸ்கொடுத்தார்.
இந்த நோட்டீஸ் அவரது வீட்டில் ஒட்டியும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்.மீறினால் அவர் கோர்ட் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என பிரகடனப்படுத்தும். மேலும்அவரது சொத்துக்களை முடக்க நேரிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.