ADDED : நவ 19, 2026 07:40 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வாரம் இன்று (நவ.,19) முதல் 25ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமைச் செயலர் சரத் சவுகான், உறுதி மொழியை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அரசுச் செயலர் முத்தம்மா, உறுதிமொழியை தமிழில் வாசித்தார். இதில், அரசுச் செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
