/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பனி மூட்டத்தால் விபத்து: மருத்துவ மாணவர் காயம்
/
பனி மூட்டத்தால் விபத்து: மருத்துவ மாணவர் காயம்
ADDED : பிப் 10, 2025 07:05 AM
பாகூர் : மூலக்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் எழில்ராஜ் 29; பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு மோட்டார் பைக்கில் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார். கடலுார்- புதுச்சேரி சாலை அரியாங்குப்பம் தனியார் டைல்ஸ் கம்பெனி எதிரே சென்றபோது, கடும் பனிமூட்டம் காரணமாக தடுப்பு கட்டையை தாண்டி வலது புறம் சென்றுள்ளார்.
அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ். பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த எழில்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.