/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவிலில் விபத்து அபாயம்
/
கன்னியக்கோவிலில் விபத்து அபாயம்
ADDED : ஆக 19, 2025 07:33 AM

பாகூர் : கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பில் உள்ள ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி - கடலுார் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரமாக ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. இதிலிருந்து வெளியான வெளச்சம் போதுமான அளவில் இல்லாததால், இந்த ஹைமாஸ் விளக்கு கம்பம் சாலையின் நடுவே மாற்றப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.இரவு நேரங்களில் நாலாப்புறமும் நல்ல வெளிச்சமாக இருந்து வந்ததால், அப்பகுதியில் விபத்துக்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, ஹைமாஸ் விளக்கு எரியாமல் உள்ளதால், அப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. சாலையை கடக்கும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பில் பழுதான நிலையில் உள்ள ஹைமாஸ் விளக்கினை சரி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.