விரிசல் ஏற்பட்ட டிரான்ஸ்பார்மர் கான்கிரீட் கம்பத்தால் விபத்து அபாயம்
விரிசல் ஏற்பட்ட டிரான்ஸ்பார்மர் கான்கிரீட் கம்பத்தால் விபத்து அபாயம்
UPDATED : ஆக 15, 2026 08:54 PM
ADDED : ஆக 15, 2026 08:52 PM

ஏம்பலம் அடுத்த நிர்ணயப்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே ஏரிக்கரை செல்லும் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வயல்வெளி மோட்டார் பம்பு செட்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி பிடித்து நிற்கும் இரண்டு கான்கிரீட் கம்பங்களும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
சேதமான மின் கம்பத்தில் இருந்து தினசரி சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. ஆபத்தான இந்த டிரான்ஸ்பார் கம்பத்தை மாற்றிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த மின்சார டிரான்ஸ்பர்மர் பழுதாகி போனதால், புதிதாக வேறு ஒரு டிரான்ஸ்பார் மாற்றப்பட்டது. ஆனால், சேதமடைந்த கான்கிரீட் கம்பங்களை மாற்றாமல் அப்படியே உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் காற்று பலமாக வீசினால் டிரான்ஸ்பார்மர் உடைந்து விழும் அபாயம் உள்ளது. சாலையோரம் இருப்பதால் அசம்பாவிதம் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தை மாற்றி அமைக்க மின்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
