/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏர்போர்ட் சாலையில் விபத்து அபாயம்
/
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏர்போர்ட் சாலையில் விபத்து அபாயம்
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏர்போர்ட் சாலையில் விபத்து அபாயம்
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏர்போர்ட் சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 19, 2025 05:08 AM
புதுச்சேரி, : அதிகாரிகளின் அலட்சியத்தால் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் விபத்து அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு மூன்று நாள் அரசு பயணமாக வந்த துணை ஜனாதிபதி ஜக்திப் தன்கர், லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பிரதான நுழைவு வாயிலுக்கு வந்து, ஏர்போர்ட் சாலை, இ.சி.ஆர்., அஜந்தா சிக்னல் வழியாக, கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
இதற்காக ஏர்போர்ட் சாலை மற்றும் பல இடங்களில் சுத்தம் செய்த அதிகாரிகள், டன் கணக்கில் குப்பைகளை டிராக்டரில் ஏற்றிச் சென்று, விமான நிலையம் எதிரில் உள்ள 'ெஹலிபேடு' மைதானத்தில் மலைபோல் கொட்டியுள்ளனர்.
மேலும், விமான நிலையம் வெளியேறும் வாயில் எதிரில் உள்ள புதர் மண்டி கிடப்பது, துணை ஜனாதிபதியின் பார்வையில் படாமல் இருப்பதற்காக, அதிகாரிகள் 100 மீட்டர் நீளத்திற்கு பச்சை நிற சாக்கு துணியை கொண்டு தடுப்பு அமைத்திருந்தனர்.
துணை ஜனாதிபதி தனது பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்று, 2 நாட்களாகியும் விமான நிலைய வெளியேறும் வாயில் எதிரில் புதரை மறைக்க கட்டப்பட்டிருந்த பச்சை நிற சாக்கு துணி தடுப்புகள் அகற்றப்படாததால், அவை காற்றில் சாய்ந்து ரோட்டில் விழுந்து, சாலையில் பறந்து கொண்டுள்ளது. இதனால், விமான நிலையத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது. பச்சை தடுப்பு அமைத்த பல இடங்களிலும் இதே நிலையில் தான் உள்ளது.
துணை ஜனாதிபதி புதுச்சேரியில் இருந்து சென்று 2 நாட்களாகியும், புதரை மறைக்க கட்டிய பச்சை தடுப்புகளை அகற்றாததும்,, 'ெஹலிபேடு' மைதானத்தில் கொட்டிய குப்பைகளை அகற்றாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது யார் நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.