/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்; சாலை பாதுகாப்பு விழாவில் முதல்வர் பேச்சு
/
வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்; சாலை பாதுகாப்பு விழாவில் முதல்வர் பேச்சு
வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்; சாலை பாதுகாப்பு விழாவில் முதல்வர் பேச்சு
வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்; சாலை பாதுகாப்பு விழாவில் முதல்வர் பேச்சு
ADDED : ஜன 31, 2025 12:28 AM
புதுச்சேரி; சாலை விதிகளை கடைபிடித்து, விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்துத் துறை சார்பில், கம்பன் கலையரங்கத்தில் நடந்த சாலைப் பாதுகாப்பு மாதம் நிறைவு விழாவில் அவர், பேசியதாவது:
சாலை விதிகளை அனைவரும் கடைபிடித்து, விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட் சாலை விபத்துகளை தவிர்க்க குழு அமைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. விழாவிற்கு, அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.
அதில் இருந்தே விழாவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும்.
புதுச்சேரியில் போக்குவரத்துத் துறையுடன் அனைத்துத் துறைகளும் இணைந்து விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் இருசக்கர வாகன விபத்துகள் ஏற்படுகிறது.
சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல், சாலைகளில் அமைக்கப்படும் வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இருப்பதே இல்லை. இதனால், வேகமாக சென்று கீழே விழுந்து தலையில் காயமடைகின்றனர்.
வேகத்தடை அமைக்கும்போது, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.
வாகனத்தில் வேகமாக செல்வது பாதுகாப்பற்றது. 40 கி.மீ., வேகத்தில் சென்றால் விபத்துகளை தவிர்க்க முடியும். வேகத்தை குறைப்பதால் 5 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாகலாம்.ஆனால், பாதுகாப்பாக செல்ல முடியும்.
சாலை விதிகளை கடைபிடித்து வேகத்தை குறைத்து வாகனங்களை ஓட்ட வேண்டும்.
லாரிகள் போன்ற கனரக வாகனங்களை இயக்குபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.ஆண்டுக்கு, புதுச்சேரியில் விபத்துகளால் 200 பேர் உயிரிழப்பது தடுக்கப்பட வேண்டும்.
போலீசார் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க உரிய கவனம் செலுத்தவேண்டும்' என்றார்.