/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மின் திட்டத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைக்க இலக்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர் தகவல்

ADDED : செப் 28, 2024 04:38 AM
புதுச்சேரி : இலவச மின்சார திட்டத்தில், 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது என, கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், கடந்த 2024ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வரும் 2027ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் ( சோலார்) அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், மேற்கூரை சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைத்திட ஒரு கிலோ வாட்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு, 60 சதுரடி மேற்தளம் தேவைப்படுகிறது. அதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 1,500 யூனிட்கள் உற்பத்தியாகும்.
சூரிய மின் உற்பத்தி சாதனம் அமைக்க குறைந்த வட்டியில் வங்கி கடன் வசதி உள்ளது. இத்திட்டதத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் நுகர்வோர்களின் பயன்பாட்டிற்கு போக, உபரியை மின்துறை வாங்கி கொண்டு, நுகர்வோர்களின் மாத மின் கட்டண பில்லில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் சேர www.pmsuryaghar.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்து இயங்க துவங்கிய உடன் நுகர்வோரின் வங்கி கணக்கில் மானியம் நேரடியாக வரவு வைக்கப்படும். சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பந்ததாரர்கள் 5 ஆண்டுகள் இலவசமாக பராமரிப்பு செய்வர்.
சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் ஆகும். நுகர்வோரால் செலவிடப்பட்ட தொகை 5 ஆண்டுகளில் திரும்ப கிடைத்துவிடும்.
புதுச்சேரியில் இந்த திட்டத்தில் சேர 19,641 நுகர்வோர் பதிவு செய்துள்ளனர். 939 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதுவரை 405 பேர் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் வீடுகளின் அமைத்துள்ளனர். அவர்களுக்கு 1.62 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விபரங்களுக்கு மின்துறை, செயற்பொறியாளர் மற்றும் உதவி மின்பொறியாளரை அணுகவும். இவ்வாறு, அந்த செய்திகுறிப்பில் கூறப் பட்டுள்ளது.