/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி
/
ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி
ADDED : பிப் 14, 2024 03:39 AM

புதுச்சேரி : ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
ஆச்சார்யா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துணை இயக்குனர் வைத்தியநாதன் விழாவினை துவக்கி வைத்தார்..
பள்ளி முதல் நிலை முதல்வர் முகமது ஃபரூக் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் நிர்வாக முதல்வர் ஜெயிஷ் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
விளையாட்டு தினத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். யோகா, சிலம்பம், மல்லர் விளையாட்டு, சாகச வளையப் பயிற்சி நடந்தது.
தொடர்ந்து சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவின் ஆண், பெண் இருபாலருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளி கிளைகளின் முதல்வர்கள், உடற்கல்வி இயக்குனர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல் நிலை முதல்வர் ஷாலினி நன்றி கூறினார்.

