/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைதிப்படையாக மாறிய அதிரடிப்படை அரசியல் தலையீட்டால் 'கப்சிப்'
/
அமைதிப்படையாக மாறிய அதிரடிப்படை அரசியல் தலையீட்டால் 'கப்சிப்'
அமைதிப்படையாக மாறிய அதிரடிப்படை அரசியல் தலையீட்டால் 'கப்சிப்'
அமைதிப்படையாக மாறிய அதிரடிப்படை அரசியல் தலையீட்டால் 'கப்சிப்'
ADDED : செப் 29, 2024 04:49 AM
புதுச்சேரி போலீசில், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் என்றாலே ஒரு 'கெத்து' இருக்கும். புதுச்சேரியில் எங்கு, கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அந்தப்பகுதி போலீசாருக்கு பக்கப்பலமாக செயல்பட்டு குற்றவாளிகள் குறித்து தகவல்களை சேகரித்து கொடுப்பதோடு, குற்றவாளிகளை பிடித்து கொடுத்து, சட்டம் ஒழுங்கை சரி செய்து, போலீஸ் துறைக்கு பெருமை சேர்த்து வந்தனர்.
அதிரடிப்படை போலீசாரின் இதுபோன்ற செயல்களால் கடந்த காலங்களில் இளைஞர்கள் குற்ற செயலில் ஈடுபட அச்சப்பட்டனர். அரசியல் பிரமுகர்களின் சிபாரிசுகளும் இந்த டீமிடம் எடுபடாமல் இருந்தது.
ஆனால், தற்போது நிலமை தலைகீழாக மாறி, அரசியல் தலையீட்டால் அதிரடிப்படை தற்போது, அமைதி படையாக மாறி புதுச்சேரியில் நடக்கும் எந்த ஒரு குற்ற செயல்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது.
அரசியல்வாதிகளின் கண் அசைவிற்கு அடிபணியாமல், பழையபடி மீண்டும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பணி செய்ய முன்வர வேண்டும்.