/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருளில் மூழ்கி கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்க சந்திப்பு ைஹமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை
/
இருளில் மூழ்கி கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்க சந்திப்பு ைஹமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை
இருளில் மூழ்கி கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்க சந்திப்பு ைஹமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை
இருளில் மூழ்கி கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்க சந்திப்பு ைஹமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 23, 2024 06:39 AM
புதுச்சேரி : லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை கல்வி சதுக்க சந்திப்பு இருளில் மூழ்கி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஒன்றாக லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை உள்ளது. இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை கல்வி சதுக்க சந்திப்பில், பல மாதமாக இருளில் மூழ்கி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கும்மிருட்டு காரணமாக வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். சாலையை கடக்கும் பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் இச்சாலை வழியாக வாக்கிங் செல்கின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் மொபைல்போனில் டார்ச் அடித்தவாறு நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். கும்மிருட்டின் காரணமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்களும் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு இருளில் மூழ்கி கிடப்பது பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்போர்ட் சாலை கல்வி சதுக்கத்தினை சுற்றிலும் ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. இங்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த சந்திப்பில் தான் வந்து பஸ் ஏற காத்திருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, ஏர்போர்ட், ஹெலிபேடு மைதானம், ஸ்கேட்டிங் மைதானம், உள்விளையாட்டு அரங்கம், தீயணைப்பு கோட்ட அதிகாரி அலுவலகம், நீதிபதி குடியிருப்பு என பலரும் இந்த சந்திப்பினை கடந்து தான் செல்லவேண்டும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு இருளில் மூழ்கி கிடப்பது அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக ைஹமாஸ் விளக்கு அமைக்க போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

