/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை
/
விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜன 02, 2025 06:32 AM
காரைக்கால்: காரைக்கால் கிழக்குப்புறச் சாலையில் அரசு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் டென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து. கூடைப்பந்து என பல்வேறு குழு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வில் அம்பு, ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற தடகள போட்டிகளுக்கு தினசரி ஏராளமான மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் வீசிய புயல் அதனைத் தொடர்ந்து பெய்த கன மழையால், ஓட்டப்பந்தய பயிற்சி செய்யும் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், மாணவ, மாணவிகளால் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஓட்டப் பயிற்சி மைதானத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி சீரமைத்து, மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.